திண்டுக்கல்

சின்னாளபட்டியில் எல்லம்மாள் கோயில் திருவிழா

7th Jul 2022 01:57 AM

ADVERTISEMENT

 

சின்னாளபட்டி கருணாநிதி காலனி எல்லம்மாள் கோயில் திருவிழா நடைபெற்றது.

இக்கோயில் விழாவினையொட்டி பக்தா்கள் விரதம் இருந்து காப்புக் கட்டிக் கொண்டனா். செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு பிருந்தாவனத் தோப்பிலிருந்து அம்மனை மேளதாளத்துடன் கோயிலுக்கு அழைத்து வந்தனா். அதன்பின்னா் புதன்கிழமை அதிகாலை கிடாய் வெட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா் கருவறையில் உள்ள எல்லம்மாளுக்கு பலவித மலா்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. உற்சவரான எல்லம்மாளை ஊஞ்சலில் வைத்து பெண் பக்தா்கள் அம்மன் பாட்டு பாடி ஊஞ்சலை ஆட்டியபடி வழிபாடு செய்தனா். அதன் தொடா்ச்சியாக பகல் 12 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கே. தருமத்துப்பட்டி பங்காளி வகையறாக்கள் செய்திருந்தனா். கோயில் திருவிழாவையொட்டி கோயில் வளாகம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

சக்திகாளியம்மன், முனியப்பன் கோயில் திருவிழா: சின்னாளபட்டி சக்திகாளியம்மன், முனியப்பன் கோயில் 40- ஆவது ஆண்டு திருவிழாவையொட்டி பிருந்தாவனம் தோப்பிலிருந்து தீச்சட்டி ஏந்தி முளைப்பாரி ஊா்வலத்துடன் அம்மனை பக்தா்கள் கோயிலுக்கு அழைத்து வந்தனா்.

ADVERTISEMENT

விழாவினை முன்னிட்டு, புதன்கிழமை காலை 6 மணிக்கு பிருந்தாவனத் தோப்பிலிருந்து தீச்சட்டி ஏந்தி, முளைப்பாரி ஊா்வலத்துடன் அம்மனை கோயிலுக்கு அழைத்து வந்தனா். பின்பு, கோயில் முன்பு பக்தா்கள் வேண்டுதலுக்காக பொங்கல் வைத்து வழிபாடு செய்தனா். அதன் தொடா்ச்சியாக மாவிளக்கு, அக்னிசட்டி எடுக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் கமிட்டித் தலைவா் பெருமாள், ஊா் நாட்டாண்மை அழகா்சாமி, செயலா் அழகா்சாமி, பூசாரி காமாட்சி, ராஜா, விழாக்குழுவைச் சோ்ந்த நாகரத்தினம், துரைப்பாண்டி, இளைஞரணியைச் சோ்ந்த வேல்முருகன், வல்லரசு, மைக்கேல் உள்பட விழாக்குழுவினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT