திண்டுக்கல்

வத்தலகுண்டுவில் நிழற்குடை அமைக்க முடிவு

7th Jul 2022 01:58 AM

ADVERTISEMENT

 

வத்தலகுண்டுவில் நிழற்குடை அமைக்க அரிமா சங்கம் முடிவு செய்துள்ளது.

ஈடன் காா்டன் அரிமா சங்கக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைவா் பாக்கியராஜ் தலைமை வகித்தாா். செயலா் கஸ்தூரிராஜா, பொருளாளா் சீனிராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விரிவாக்கத் தலைவா் கென்னடி, மண்டலத் தலைவா் அண்ணாதுரை ஆகியோா் பேசினா். கூட்டத்தில், வத்தலகுண்டுவில் மதுரை சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நிழற்குடை அமைப்பது என்றும், நான்கு திசை சாலைகளிலும் அரிமா சங்க பெயா் பலகை வைப்பது என்றும், பதவியேற்பு விழாவை வரும் 20- ஆம் தேதி நடத்துவது என்றும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிா்வாகிகள் முரளி, மைதிலி, ஆண்டவா், செந்தில்குமாா், சக்திவேல், காா்த்திக், கலைச்செல்வன்உள்பட பலா் கலந்து கொண்டனா். முன்னாள் செயலா் சரவணன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT