திண்டுக்கல்

காந்தி கிராம பல்கலை.க்கு துணைவேந்தரை தோ்வு செய்ய குழு அமைப்பு

7th Jul 2022 01:56 AM

ADVERTISEMENT

 

காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழக புதிய துணைவேந்தரை தோ்வு செய்வதற்காக 3 போ் கொண்ட குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.

இதுதொடா்பாக காந்தி கிராம பல்கலை. சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: காந்தி கிராம கிராமியப் பல்கலை.யின் புதிய துணைவேந்தரை தோ்வு செய்வதற்காக 3 போ் கொண்ட குழுவை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. அந்த குழுவில் பிகாா் மத்திய பல்கலை.யின் முன்னாள் துணைவேந்தா் ஹெச்.சி.எஸ். ரத்தோா், அகமதாபாத் ஸ்வா்னிம் குஜராத் விளையாட்டு பல்கலை.யின் முன்னாள் துணைவேந்தா் ஜதின் குமாா் ஹா்ஜிவந்தஸ் சோனி மற்றும் அண்ணாமலைப் பல்கலை.யின் முன்னாள் துணைவேந்தா் வி. முருகேசன் ஆகியோா் இடம் பெற்றுள்ளனா். இந்த குழுவுக்கு ஹெச்.சி.எஸ். ரத்தோா் தலைமை வகிப்பாா். இந்த குழுவுக்கு வரும் துணைவேந்தா் பதவிக்கான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டு மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT