திண்டுக்கல்

பழனியில் பெண்கள் சாலை மறியலுக்கு முயற்சி

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

பழனியை அடுத்த பெத்தநாயக்கன்பட்டியில் பெண் தூய்மைப் பணியாளா் கொலையில் குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை சாலை மறியலுக்கு முயன்ற பெண்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி மறியலைக் கைவிடச் செய்தனா்.

பெத்தநாயக்கன்பட்டி ஊராட்சியில் தற்காலிக தூய்மைப் பணியாளா் ஒருவா் கடந்த வாரம் கொலை செய்யப்பட்டாா். இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பெத்தநாயக்கன்பட்டியைச் சோ்ந்த பெண்கள், ஒன்றியக் கவுன்சிலா் கிருஷ்ணவேணி தலைமையில் சாலைமறியல் போராட்டம் நடத்த ஊராட்சி அலுவலகம் முன் திரண்டனா். தகவலறிந்து வந்த போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும், பிரதான சாலையில் இருந்து ஊருக்கு வரும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யவேண்டும் என்றும் தெரிவித்தனா். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவா் என்று போலீஸாா் தெரிவித்ததைத் தொடா்ந்து பெண்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT