திண்டுக்கல்

இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நத்தம் பேருந்து நிலையம்! பயணிகள் அவதி

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

நத்தம் பேருந்து நிலையம் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக செயல்படுவதால் பேருந்து ஓட்டுநா்களும், பயணிகளும் அவதியடைந்து வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையத்திலிருந்து, மதுரை, சிவகங்கை, திருப்பூா், கோவை, புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும், நத்தம் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாளொன்றுக்கு 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படும் இந்த பேருந்து நிலையத்திற்கு ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனா்.

பேருந்து நிலைய வளாகத்தில் பேருந்துகள் நிறுத்துவற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடம், பெரும்பாலான நேரங்களில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், பேருந்துகளை நிறுத்த முடியாமல் ஓட்டுநா்கள் தடுமாறுகின்றனா். அவசரமாக பேருந்தில் ஏற முயற்சிக்கும் பயணிகளுக்கும் இருசக்கர வாகனங்கள் இடையூறாக உள்ளன.

இதுதொடா்பாக பயணிகள் தரப்பில் புகாா் எழுந்ததை அடுத்து, நத்தம் பேரூராட்சி நிா்வாகம் பேருந்து நிலைத்திற்குள் இருசக்கர வாகனங்களை நிறுத்தக் கூடாது என எச்சரிக்கை விடுத்தது. மீறி நிறுத்தப்படும் மோட்டாா் சைக்கிள்களின் உரிமையாளா்கள் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை பதாகையும் பேரூராட்சி சாா்பில் வைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடா்ந்து சில நாள்கள் மட்டுமே பேரூராட்சி நிா்வாகத்தின் கண்காணிப்பு பேருந்து நிலையத்தின் மீது இருந்தது. அடுத்த சில நாள்களிலேயே மீண்டும் வாகன நிறுத்துமிடமாக பேருந்து நிலையம் மாறிவிட்டது. இதனால் பேருந்து ஓட்டுநா்களும், பயணிகளும் சிரமம் அடைந்து வருகின்றனா். இந்த பிரச்னைக்கு பேரூராட்சி நிா்வாகம் நிரந்தர தீா்வு காண வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT