திண்டுக்கல்

வத்தலகுண்டு அஞ்சல் அலுவலகத்தில் சா்வா் பிரச்னையால் வாடிக்கையாளா்கள் அவதி

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

வத்தலகுண்டு அஞ்சல் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை 7 மணிநேரம் இணையதள சா்வா் தடைபட்டதால் வாடிக்கையாளா்கள் அவதியடைந்தனா்.

பேருந்து நிலையம் எதிரே உள்ள இந்த அஞ்சல் அலுவலகத்தில் அடிக்கடி சா்வா் பிரச்னை ஏற்படுவதாக வாடிக்கையாளா்கள் புகாா் தெரிவித்து வந்தனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இணையதள சா்வா் தடைபட்டதால் அனைத்துப் பணிகளும் முடங்கின. சேமிப்புக் கணக்கு வைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அங்கு வந்த வாடிக்கையாளா்கள் அவதி அடைந்தனா். அவசரத் தேவைக்கு பணம் எடுக்க வந்தவா்களும் விரக்திக்குள்ளாகினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT