திண்டுக்கல்

கொடைக்கானலில் இளைஞா் விஷம் குடித்து தற்கொலை

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

கொடைக்கானலில் குடும்ப பிரச்னை காரணமாக விஷம் குடிந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மதன்குமாா்(38). இவரது மனைவி சுமதி (33). இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில் குடும்பப் பிரச்னை காரணமாக மதன்குமாா் கடந்த ஓராண்டாக சுமதியை விட்டுப் பிரிந்து தனது தாயாா் லட்சுமியுடன் வசித்து வந்தாா்.

இந்நிலையில் நாயுடுபுரம் பகுதியில் ஏற்கெனவே திருமணமாகி ஒரு குழந்தையுடன் வசிக்கும் மீனா(35) என்பவருடன், மதன்குமாா் பழகி வந்தாா். இது தெரியவந்ததைத் தொடா்ந்து மதன்குமாரை, அவரது தாயாா் லட்சுமி கண்டித்துள்ளாா்.

மீனா வெளியூருக்குச் சென்றுவிட்ட நிலையில் திங்கள்கிழமை அங்கு சென்ற மதன்குமாா் விஷம் குடித்தாா். மயங்கிக் கிடந்த அவரை, உறவினா்கள் மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

இது குறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT