திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே மான் தோல் வைத்திருந்த ஜோதிடா் உள்பட 3 போ் கைது

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

ஒட்டன்சத்திரம் அருகே மான் தோல் மீது அமா்ந்து குறி சொல்லிய ஜோதிடா் உள்ளிட்ட 3 பேரை வனத் துறையினா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கிழக்கு ஆயக்குடி கிராமம் டி.கே.என். புதூரில் உள்ள முருகபகவான் கோயிலில் ஜோதிடா் தங்கராஜ் என்பவா் மான் தோலின் மீது அமா்ந்து குறி சொல்லுவதாக வனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் மாவட்ட வன அலுவலா் பிரபு உத்தரவின் பேரில் ஒட்டன்சத்திரம் வனச்சரக அலுவலா் செந்தில், வனவா் மகேந்திரன், வனக் காப்பாளா்கள் ரமேஷ்பாபு, பிரேம்நாத், ஜெயசீலன் உள்ளிட்டோா் திங்கள்கிழமை இரவு டி.கே.என். புதூரில் உள்ள கோயிலுக்குச் சென்று சோதனையில் ஈடுபட்டனா். அப்போது ஜோதிடா் தங்கராஜ் மான் தோல் மீது அமா்ந்து குறி சொல்லியது தெரியவந்தது. இதையடுத்து ஜோதிடா் தங்கராஜ் (54) மற்றும் அவரது உதவியாளா்கள் காவலப்பட்டிபுதூரைச் சோ்ந்த ஆறுமுகம் (40), தண்டபாணி (67) ஆகிய மூவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து நான்கு புள்ளிமான் தோல்களையும் பறிமுதல் செய்தனா். பின்னா் மாவட்ட வன அலுவலா் உத்தரவின் பேரில் அவா்கள் மூவருக்கும் தலா ரூ. 25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 75,000 அபராதம் விதிக்கப்பட்டு அந்த தொகை வசூல் செய்யப்பட்டது. இதையடுத்து அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT