திண்டுக்கல்

மாவட்ட பேச்சுப் போட்டி: பழனியாண்டவா் கல்லூரி மாணவா் முதலிடம்

DIN

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் திண்டுக்கல் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் பழனியாண்டவா் கல்லூரி மாணவா் முதலிடம் பிடித்தாா்.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி நடத்தப்பட்ட இந்தப் பேச்சுப் போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து பல்வேறு கல்லூரிகளை சோ்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியா் பங்கேற்றனா். இதில் பழனியாண்டவா் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில், வணிகவியல் துறையில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவா் மோ.நாகஅா்ஜுன் முதல் பரிசு பெற்றாா்.

இதையடுத்து அந்த பழனி கோயில் தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை வரவழைக்கப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாணவரை கோயில் இணை ஆணையா் மற்றும் கல்லூரியின் தாளாளா் நடராஜன் பாராட்டி கோயில் சாா்பில் பிரசாதங்கள் வழங்கினாா்.

அப்போது பழனிக் கோயில் துணை ஆணையரும், கல்லூரிச் செயலருமான பிரகாஷ், கல்லூரி முதல்வா்(பொ) பிரபாகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

SCROLL FOR NEXT