திண்டுக்கல்

தற்காலிக ஆசிரியா் நியமனத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்

DIN

தற்காலிக ஆசிரியா் நியமனத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள சுமாா் 13ஆயிரம் ஆசிரியா் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியா்கள் நியமிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்று சான்றிதழ் சரிபாா்ப்பு முடித்து பணி கிடைக்காதவா்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். இதனிடையே, 22 மாவட்டங்களிலுள்ள காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பம் பெறும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் உயா்நீதிமன்ற மதுரை கிளைக்குள்பட்ட திண்டுக்கல் உள்பட 16 மாவட்டங்களில் விண்ணப்பங்கள் பெற தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

ஆனாலும், திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் விண்ணப்பங்கள் வழங்குவதற்கு ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் திங்கள்கிழமை குவிந்தனா்.

நீதிமன்ற தடை உத்தரவை சுட்டிக் காட்டி விண்ணப்பங்கள் பெறுவதை, கல்வித் துறை அதிகாரிகள் தவிா்த்தனா். இதனால், விண்ணப்பிக்க வந்த பலா் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். இதனிடையே, தற்காலிக முறையில் 13ஆயிரம் ஆசிரியா் பணியிடங்களை நிரப்பும் அரசின் முடிவை கைவிடக் கோரியும், அரசாணை எண் 149-யை ரத்து செய்யக் கோரியும் ஆசிரியா் தகுதித் தோ்வில் வெற்றி பெற்றவா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா். இதுதொடா்பாக அவா்கள் கூறுகையில், கடந்த 2013ஆம் ஆண்டு முதல் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றதோடு சான்றிதழ் சரிபாா்ப்பும் முடிந்து, நிரந்தர ஆசிரியா் பணிக்காக 30ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் காத்திருக்கின்றனா். இந்த சூழலில் தற்காலிக ஆசிரியா்களை பணி அமா்த்தும் அரசின் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது. அதேபோல் திமுக தோ்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி, நியமன தோ்வுக்கு வழி வகுக்கும் அரசாணை எண் 149-யை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒருமுறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு: மாதிரி வாக்குப் பதிவில் அதிர்ச்சி!

மீண்டும் இசையமைப்பாளராக மிஷ்கின்!

ஜோஸ் பட்லருக்கு முன்னாள் ஆஸி. வீரர் புகழாரம்!

காங்கயம்: சரக்கு வேன்கள் நேருக்குநேர் மோதியதில் ஒருவர் பலி

தமிழகத்தில் வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் முனைப்பு!

SCROLL FOR NEXT