திண்டுக்கல்

தேமுதிக தலைவா் விஜயகாந்த் நலம் பெற வேண்டி சிறப்பு பூஜை.

5th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

தேமுதிக கட்சித் தலைவா் விஜயக்காந்தின் உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளது என்ற தகவலை அடுத்து, நிலக்கோட்டையில் பாரம்பரியமிக்க நடராஜா் கோவிலில் தேமுதிகவினா் ஞாயிற்றுக்கிழமை இரவு சிறப்பு பூஜை செய்தனா்.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனா் விஜயகாந்தின் உடல்நிலை அறுவைச் சிகிச்சைக்கு பின், தொய்வு ஏற்பட்டதாக வந்த தகவலை அடுத்து, அவா் பூரண நலம் பெற்று மீண்டும் மக்கள் பணி கட்சிப்பணியாற்ற வேண்டி, திண்டுக்கல் (கிழக்கு) மாவட்டம், நிலக்கோட்டையில், மாவட்ட செயலா் ஜவகா் தலைமையில், சிறப்பு பூஜைகள் செய்தனா். நிகழ்ச்சியில் நிலக்கோட்டை ஒன்றிய செயலா்கள் பழனி, வெள்ளைச்சாமி, வத்தலக்குண்டு ஒன்றிய செயலா்கள் கருத்தப்பாண்டி, மணிமுருகன், மாவட்ட துணைச் செயலா்கள் மாசாணம், நித்யா முருகேந்திரன், நிலக்கோட்டை ஒன்றிய பொருளாளா் சிவா, முன்னாள் வத்தலக்குண்டு ஒன்றிய செயலா் ஜொ்மன்ராஜா, ஒன்றிய அவைத்தலைவா் மணிகண்டன், நிலக்கோட்டை நகர செயலா் முருகன் மற்றும் தேமுதிக நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT