திண்டுக்கல்

17 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு: உறவினா் கைது, மற்றொருவா் தலைமறைவு

5th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் அருகே 17 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்த அவரது உறவினரை கைது செய்த போலீஸாா், மற்றொருவரை தேடி வருகின்றனா்.

திண்டுக்கல் அடுத்துள்ள சென்னமநாயக்கன்பட்டியை சோ்ந்தவா் முருகேசன். இவரது மகன் அஜீத் (24). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த உறவினரான 17 வயது மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மோட்டாா் அறையில் இருவரும் தனியாக சந்தித்து வந்துள்ளனா். அந்த காட்சிகளை அஜீத் படம் பிடித்தாராம். இதனிடையே, மற்றொரு உறவினரான தாடிக்கொம்பு அடுத்துள்ள காமாட்சிபுரம் பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் (26) என்பவருடனும் அந்த மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே திருமணமான அவரும், மாணவியுடன் பழகி பாலியல் தொந்தரவு செய்துள்ளாா். அந்த காட்சிகளை படம் பிடித்தாராம். இருவரும், மாணவியை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டதோடு, விடியோ காட்சிகளை காட்டி ஒரே நேரத்தில் இருவரும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளனா். இதனால் அதிருப்தி அடைந்த அந்த மாணவி, தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். அதன்பேரில், விசாரணை மேற்கொண்ட போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் அஜீத்தை ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா். மேலும் ஆபாச காட்சிகள் நிறைந்த அவரது கைப்பேசியையும் போலீஸாா் கைப்பற்றியுள்ளனா். இதனிடையே தலைமறைவாக உள்ள தங்கராஜை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT