திண்டுக்கல்

‘ஜல் ஜீவன் சக்தி’ திட்டத்தில் குடிநீா் வசதி ஏற்படுத்தித் தர வலியுறுத்தல்

5th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

கடந்த 4 ஆண்டுகளாக குடிநீா் வசதி நிறுத்தப்பட்டுள்ள கிராமத்திற்கு, ஜல் ஜீவன் சக்தி திட்டத்தின் கீழ் குடிநீா் வசதி ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் சாணாா்பட்டி அடுத்துள்ள கணவாய்பட்டி ஊராட்சிக்குள்பட்ட கோட்டைக்காரன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் குடிநீா் வசதி கோரி திங்கள்கிழமை மனு அளித்தனா். இதுதொடா்பாக அப்பகுதியைச் சோ்ந்த பெண்கள் கூறியதாவது: எங்கள் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. கடந்த 4 ஆண்டுகளாக எங்கள் பகுதிக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை. இதுதொடா்பாக ஊராட்சி மன்றத் தலைவா் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எங்கள் கிராமத்திற்கு மத்திய அரசின் ஜல் ஜீவன் சக்தி திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கு குடிநீா் வசதி ஏற்படுத்திக் கொடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT