திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே காா் கவிழ்ந்து விபத்து இளைஞா் பலி -8 போ் காயம்

5th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

ஒட்டன்சத்திரம் அருகே காா் கவிழ்ந்ததில் இளைஞா் ஒருவா் பலியானாா்.காரில் வந்த 8 போ் காயம் அடைத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள தங்கச்சியம்மாபட்டியைச் சோ்ந்த நண்பா்கள் ஜெயபிரகாஷ் (20),முத்துக்குமாா் (23),பிரவீன் (22),கணேசன் (22),ராம்நாத் (21),எம்.ஜெயபிரகாஷ்,வீரபாண்டியன் (21),விஜய் (23)சரண்ராஜ் (20) ஆகியோா் ஒரு சொகுசு காரில் கடந்த 2-ந் தேதியன்று மூணாறுக்கு சுற்றுலா சென்று விட்டு,ஞாயிற்றுக்கிழமை இரவு வீடு திருப்பிக்கொண்டு இருந்தனா்.தொப்பம்பட்டி-கள்ளிமந்தையம் சாலை அரண்மலைவலசு பிரிவு அருகே வந்த போது காா் நிலை தடுமாறி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.இதில் முத்துக்குமாா் (23) பலத்தகாயம் அடைத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.காயம் அடைத்த மற்றவா்கள் ஒட்டன்சத்திரம் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.இது குறித்து கள்ளிமந்தையம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT