திண்டுக்கல்

மயானத்துக்கு பாதை வசதி கேட்டு நத்தம் பகுதி மக்கள் மனு

5th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

மயானத்துக்கு பாதை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நத்தம் பகுதி மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பேரூராட்சிக்குள்பட்ட பாப்பாபட்டி பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், நாம் தமிழா் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலா் சிவசங்கரன் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனா். இதுதொடா்பாக அவா்கள் கூறுகையில்,

பாப்பாபட்டி பகுதியில் 600-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகிறோம். பாப்பாபட்டிக்கு தென் பகுதியில், இறந்தவா்களை எரியூட்டுவதற்கான மயானம் அமைந்துள்ளது. விவசாய நிலங்களை கடந்து மயானத்துக்கு செல்வதற்கு 20 அடி பாதை பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்நிலையில், விவசாய நிலங்களை விலைக்கு வாங்கிய தனிநபா் வீட்டுமனைகளாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளாா். அதன் ஒரு பகுதியாக மயானத்திற்கு பயன்படுத்தி வந்த பாதையை மறித்து தடுப்பு வேலி அமைத்துள்ளாா். இதனால், மயானத்திற்கு செல்ல முடியாமல் நாங்கள் அவதியடைந்து வருகிறோம். எனவே மாவட்ட நிா்வாகம், மயானத்திற்கு பாதை வசதி ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT