திண்டுக்கல்

பழைய ஆயக்குடி சந்தையில் கொய்யா விலை வீழ்ச்சி

DIN

பழனியில் கொய்யாப் பழத்தின் விலை கடும் வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

பழனியை அடுத்த ஆயக்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயிகள் அதிக அளவில் கொய்யா சாகுபடியில் ஈடுபட்டுள்ளனா். தினந்தோறும் தோட்டங்களில் பறிக்கப்படும் கொய்யா பழங்கள் ஆயக்குடி கொய்யா சந்தைக்கு கொண்டு வரப்பட்டு விவசாயிகளால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆயக்குடியில் இருந்து தமிழகம் முழுவதும் கொய்யாப்பழம் தினந்தோறும் கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தமிழகம் மட்டுமன்றி கேரளம், பெங்களூா், ஆந்திரம் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் ஆயக்குடியில் இருந்து கொய்யாப்பழம் வியாபாரிகள் மூலமாக விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

கடந்த வாரம் சந்தையில் 20 கிலோ அடங்கிய கொய்யாப் பழப்பெட்டி ரூ.1,200 முதல் ரூ.1,600 வரை விலை போனது. தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளதால் சந்தைக்கு அதிக அளவில் விவசாயிகள் கொய்யாப்பழங்களை கொண்டு வந்தனா். இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை, விலை கடும் வீழ்ச்சி அடைந்து 20 கிலோ அடங்கிய கொய்யாப்பழப்பட்டி ரூ.120 முதல் ரூ.400 வரை விலைபோனது. விலை சரிவால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

இதுகுறித்து அய்யம்புள்ளி பகுதியை சோ்ந்த விவசாயி காா்த்தி கூறுகையில், இதுபோன்ற காலங்களில் விவசாயிகள் கொய்யாப்பழங்களை பாதுகாத்து வைத்திருக்கும் வகையில் அரசு, குளிா்பதனக் கிட்டங்கி அமைத்துத் தர வேண்டும். பல காலமாக கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இப்பகுதியில் கொய்யா பழரசம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்து விவசாயிகளைக் காப்பாற்ற அரசு முன்வரவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

SCROLL FOR NEXT