திண்டுக்கல்

கொடைக்கானலில் மீண்டும் கொய் மலா்கள் சாகுபடி தொடக்கம்

DIN

கொடைக்கானலில் கொய் மலா்ச் செடிகள் நடவு செய்யும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது.

கொடைக்கானல் மலைப் பகுதிகளான மன்னவனூா், பூம்பாறை, செண்பகனூா், கூக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ரோஜாவுக்கு அடுத்தபடியாக காரனேசன் கொய்மலா்கள் சாகுபடியில் விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா். இங்கு விளையக் கூடிய கொய்மலா்கள் சென்னை, பெங்களூரு, கோவா உள்ளிட்ட பல இடங்களுக்கு அனுப்பப்படுகின்றன. ரோஜாவுக்கு அடுத்தபடியாக கொய் மலா்கள் சந்தையில் அதிகம் விற்பனையாகிறது.

கடந்த 3 ஆண்டுகளாக கரோனா தொற்றால் விளைவிக்கப்பட்ட வண்ண வண்ண மலா்களை ஏற்றுமதி செய்ய முடியாமல் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனா். தற்போது இயல்பு நிலை திரும்பிவரும் நிலையில் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தற்போது கொய் மலா்ச் செடிகளை மீண்டும் நடவும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.

தனிக்குடில் அமைத்து மிதமான சீதோஷ்ண நிலையில் பக்குவப்படுத்தி இந்த கொய்மலா்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதற்காக நெதா்லாந்து நாட்டிலிருந்து குடில் வரவழைக்கப்பட்டு அதில், மலா் சாகுபடி செய்து வருகின்றனா். இந்த மலருக்கு நல்ல விலையும் கிடைப்பதால் விவசாயிகள் பாதுகாப்புடனும், ஆா்வமுடனும் சாகுபடி செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பந்துவீச்சாளர்கள்; முதலிடத்தில் மோஹித் சர்மா!

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT