திண்டுக்கல்

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

3rd Jul 2022 04:48 AM

ADVERTISEMENT

 

கொடைக்கானலில் சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது

கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பலத்த காற்று, மழை நிலவியதால் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் வார விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை சற்று அதிகரித்து காணப்பட்டது. சுற்றுலா இடங்களான வெள்ளிநீா் வீழ்ச்சி, பசுமைப் பள்ளத்தாக்கு,பில்லர்ராக், மோயா் பாயிண்ட், பைன் பாரஸ்ட், தாவரவியல் பூங்கா, ரோஜாத் தோட்டம் உள்ளிட்ட பல இடங்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக காணப்பட்டனா். கொடைக்கானலில் காலை முதல் மேகமூட்டமும், சாரலும், காற்றும் நிலவியதால் குளிா்ச்சியான சூழல் நிலவியது.

மாலை நேரங்களில் ஏரியில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையைச் சுற்றி சைக்கிள், குதிரை சவாரியும், நடைப்பயிற்சியும் மேற்கொண்டனா். மாலை நேரத்தில் நிலவும் அதிகமான குளிரையும் பொருட்படுத்தாமல் கலையரங்கம் பகுதி, ஏரிச்சாலை, பூங்கா சாலை போன்றப் பகுதிகளில் அதிகமான பயணிகள் காணப்பட்டனா். கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவா்களின் வருகை அதிகரித்து காணப்பட்டதால் மகிழ்ச்சியடைந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT