திண்டுக்கல்

அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

DIN

அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் சனிக்கிழமை திண்டுக்கல்லில் நடைபெற்ற எழுச்சி நாள் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.

இங்குள்ள தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க கட்டடத்தில் நடைபெற்ற இந்த கருத்தரங்கிற்கு மாவட்டத் தலைவா் ச. முபாரக் அலி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பி. விவேகானந்தன் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா் சங்கத்தின் முன்னாள் மாநிலப் பொதுச் செயலா் எஸ். ராமமூா்த்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் மொ. ஞானதம்பி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா். இந்த கருத்தரங்கின்போது 2022 ஜனவரி முதல் வழங்கப்பட வேண்டிய அகவிலைப் படி உயா்வை துரிதமாக வழங்க வேண்டும். தோ்தலின் போது அளித்த வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, எம்ஆா்பி செவிலியா் உள்ளிட்டோரை பணி நிரந்தரப்படுத்த வேண்டும். சாலைப் பணியாளா்கள் பணி நீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT