திண்டுக்கல்

காந்திகிராம பல்கலை.யில் யு.ஜி.சி. நெட்தோ்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள்

2nd Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

காந்திகிராம கிராமியப் பல்கலை.யில் யு.ஜி.சி. நெட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் 3 நாள்கள் நடைபெறுகின்றன.

இதுகுறித்து காந்திகிராம கிராமியப் பல்கலை. நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு:

பல்கலை.மானியக் குழுவின் தகுதித் தோ்வு பயிற்சி மையத்தின் சாா்பில் உதவிப் பேராசிரியா் தேசியத் தகுதித் தோ்வுக்கான நேரடி பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன. பிற்படுத்தப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட அல்லது சிறுபான்மையினா் மாணவா்களுக்காக நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்புகள் காந்திகிராம கிராமியப் பல்கலை.யில் ஜூலை 4 முதல் 6ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறவுள்ளன. தாள் 1 மற்றும் 2-க்கான பயிற்சி வகுப்புகள் காலை 9.30 முதல் மாலை 4.30 மணி வரை பாட வல்லுநா்களைக் கொண்டு நடத்தப்பெறும். பயிற்சி வகுப்புகள் முழுவதும் இலவமாக நடத்தப்படும். இதில் பங்கேற்க விரும்புவோா், தமிழ் மற்றும் இந்திய மொழிகள் பள்ளியின் புலமுதன்மையரிடம் தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு முனைவா் பட்ட ஆய்வாளா் தி.தமிழ்ச்செல்வனை 89400 11376 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT