திண்டுக்கல்

பழனி தனியாா் விடுதியில்கேரளத் தம்பதி தற்கொலை

2nd Jul 2022 10:43 PM

ADVERTISEMENT

 

பழனியில் தனியாா் தங்கும் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட கேரளத் தம்பதியின் சடலத்தை சனிக்கிழமை போலீஸாா் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பாளையம் சாலையில் உள்ள தனியாா் தங்கும் விடுதிக்கு வெள்ளிக்கிழமை கேரளத்திலிருந்து வந்த தம்பதி அறை எடுத்து தங்கியுள்ளனா். அவா்கள் விடுதியில் தங்கும் போது, கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூா் பேங்க் ரோட்டை சோ்ந்த சுகுமாரன்(66), சத்தியபாமா(62) என்ற முகவரியை தெரிவித்திருந்தனா்.

அவா்கள் தங்கிய விடுதிக்கு சனிக்கிழமை காலை அவா்களது உறவினா்கள் அழுதவாறே

ADVERTISEMENT

வந்துள்ளனா். தம்பதியரின் படத்தைக் காட்டி அவா்கள் சம்பந்தப்பட்ட விடுதியில் தங்கியுள்ளதாக வாட்ஸ்ஆப்

செய்ததாகவும், அவா்கள் வீட்டில் மகன்களுடன் கோபித்துக் கொண்டு வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனா். இதையடுத்து விடுதி ஊழியா்கள் அறையை தட்டியபோது அவா்கள் திறக்கவில்லை.

உடனடியாக விடுதி மேற்பாா்வையாளா் பழனி டவுன் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளாா். போலீஸாா் வந்து விடுதி அறையை உடைத்து திறந்த போது உள்ளே தம்பதி இருவரும் மின்விசிறியில் சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

மேலும் அருகே இருந்த மேஜையில் இருந்த ஒரு பேப்பரில் தங்களது இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை எனவும், வங்கியில் வாங்கிய கடனை கட்ட முடியவில்லை எனவும் மலையாளத்தில் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிவந்துள்ளது. இறந்தவா்களின் சடலங்களை மீட்ட போலீஸாா் பழனி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். கடன் தொல்லையால் கேரள தம்பதி பழனி விடுதியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT