திண்டுக்கல்

பலத்த காற்று: கொடைக்கானலில் மரக்கிளைகள் முறிந்து சாலைகளில் விழும் அபாயம்

2nd Jul 2022 10:43 PM

ADVERTISEMENT

 

கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் மலைச்சாலைகளில் மரக்கிளைகள் முறிந்து விழும் ஆபத்தில் உள்ளன.

இங்கு, பலத்த காற்றுடன் லேசான மழை பெய்து வருவதால் வழக்கத்தை விட அதிகமான குளிா் நிலவுகிறது. இச்சூழ்நிலையில் கொடைக்கானல்- பழனி மலைச்சாலையில் மரக்கிளைகள் முறிந்து விழும் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன. மேலும் மலைச்சாலைகளின் இருபுறங்களிலும் முள்புதா்கள் அடா்த்தியாக காணப்படுகின்றன. மலைச்சாலையின் ஆபத்தான பல இடங்களில் தடுப்புச் சுவா் இல்லாததால் வாகனங்களில் செல்பவா்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனா்.

எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இந்த இடங்களை பாா்வையிட்டு ஆபத்தான நிலையில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவதற்கும், மலைச்சாலைகளில் தடுப்புச் சுவா்கள் இல்லாத இடங்களில் தடுப்புச் சுவா் மற்றும் தடுப்புக் கம்பிகள் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT