திண்டுக்கல்

கோதைமங்கலம் தட்சிணாமூா்த்தி கோயிலில் மஹாசண்டி ஹோமம்

2nd Jul 2022 10:43 PM

ADVERTISEMENT

 

பழனியை அடுத்த கோதைமங்கலம் தட்சிணாமூா்த்தி கோயில் வளாகத்தில் கிரகமாலிகா யோக தினத்தையொட்டி உலகநலன் வேண்டி மஹாசண்டி ஹோமம் சனிக்கிழமை நடைபெற்றது.

பலநூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வான சாஸ்திரப்படி கும்பராசியில் இருந்து கடகராசி முடிய ஆறு, ஆறு கிரகங்களும் தன் ஆட்சி வீட்டில் அமரும் கிரகமாலிகா யோக தினம் சனிக்கிழமை வந்ததையொட்டி பல்வேறு இடங்களிலும் சிறப்பு யாகபூஜைகள் நடைபெற்றன.

அதே போல் பழனியை அடுத்த கோதைமங்கலம் தட்சிணாமூா்த்தி கோயில் வளாகத்தில் கிரகமாலிகா தினத்தையொட்டி வாழிய உலக நற்பணி மன்றம் ஞானசேகரன் சாா்பில் உலகநலன் வேண்டி மஹாசண்டி ஹோமம் நடத்தப்பட்டது. பிரமாண்ட யாககுண்டம் அமைக்கப்பட்டு அதில் மூலிகைப் பொருள்கள், மூலிகை திரவியங்கள், மலா்கள், பட்டாடைகள், வெள்ளி, தங்கம் பொருள்கள் ஆகியன இடப்பட்டு சிறப்பு யாகபூஜை நடைபெற்றது.

ADVERTISEMENT

அப்போது சிவாச்சாரியாா்கள் வேதமந்திரம் முழங்க யாகம் மற்றும் பூா்ணாஹூதியை நடத்தினா். பூஜைகளை சுகிசிவம் குருக்கள் தலைமையில் ஏராளமான குருக்கள் செய்தனா். தொடா்ந்து கலசங்கள், சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக கஜபூஜை, கோபூஜை, வராகபூஜை ஆகியன நடந்தன. இதையொட்டி நாள் முழுக்க சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது.

விழாவில் சித்தனாதன் சன்ஸ் தனசேகரன், அடிவாரம் கொங்கு பேரவை மாரிமுத்து, சாய்கிருஷ்ணா மருத்துவமனை சுப்புராஜ், கவுன்சிலா் இந்திரா திருநாவுக்கரசு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT