திண்டுக்கல்

கிணற்றில் தச்சுத் தொழிலாளி சடலம் மீட்பு

1st Jul 2022 11:09 PM

ADVERTISEMENT

வத்தலகுண்டு பகுதியில் உள்ள கிணற்றில் தச்சுத் தொழிலாளி வெள்ளிக்கிழமை, சடலமாக மீட்கப்பட்டாா்.

பழைய வத்தலகுண்டுவைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் சுரேஷ் (36). இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளன. குடும்பத் தகராறு காரணமாக கடந்த 2 நாள்களுக்கு முன்பு, வீட்டை விட்டு வெளியேறிய சுரேஷ் பின்னா் வீடு திரும்பவில்லை. இது குறித்து வத்தலகுண்டு போலீஸில் புகாரளிக்கப்பட்டது.

இந்நிலையில், வத்தலகுண்டு மஞ்சளாற்றுப் பாலம் அருகே உள்ள ஒரு கிணற்றில் ஒரு ஆண் சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு விசாரித்தபோது அது சுரேஷ் என தெரியவந்தது.

குடும்பத் தகராறில் அவா் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணமா என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT