திண்டுக்கல்

காப்பீட்டுத் திட்டத்தில் சிறந்த சேவை புரிந்த மருத்துவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

1st Jul 2022 11:08 PM

ADVERTISEMENT

தேசிய மருத்துவா்கள் தினத்தை முன்னிட்டு, சிறப்பாக சேவை புரிந்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மருத்துவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் வெள்ளிக்கிழமை பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தில் 2021-2022-ஆம் ஆண்டில் சிறப்பாக பணியாற்றியதற்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியைச் சோ்ந்த மருத்துவா் ஸ்ரீவித்யா மற்றும் ஒட்டன்சத்திரம் கிறித்துவ ஐக்கிய மருத்துவமனை மருத்துவா் அனிஷ் தாமஸ் ஜேக்கப் ஆகியோருக்கு சான்றிதழ் வழங்கி ஆட்சியா் ச.விசாகன் பாராட்டுத் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், நலப் பணிகள் இணை இயக்குநா் பாக்கியலட்சுமி, வேடசந்தூா் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் எஸ்.அன்புச்செல்வன், மாவட்ட காப்பீட்டுத் திட்ட அலுவலா் விஜய் ஆனந்த் ஆகியோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT