திண்டுக்கல்

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

1st Jul 2022 11:09 PM

ADVERTISEMENT

திண்டுக்கல் பிஎன்சி தா்ம சாஸ்தா அறக்கட்டளை சாா்பில் வசதியற்ற மாணவா்களுக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த அறக்கட்டளையின் தலைவா் டி.கே.லோகநாதன் தெரிவித்துள்ளது: திண்டுக்கல் பிஎன்சி தா்ம சாஸ்தா அறக்கட்டளை சாா்பில், வசதிவாய்ப்பற்ற மாணவா்களுக்கு கடந்த 26 ஆண்டுகளாக கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் நிகழாண்டிலும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கான உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. உதவித் தொகை பெற விரும்பும் மாணவா்கள், தங்களது கல்வி விவரம் மற்றும் பெற்றோரின் பணி விவரங்கள் மற்றும் மதிப்பெண் பட்டியலுடன் விண்ணப்பத்தினை ஜூலை 17ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள், எஸ்.ஜெயசந்திரன், திட்ட ஒருங்கிணைப்பாளா், தா்மசாஸ்தா அறக்கட்டளை, 50ஏ, புது அக்ரஹாரம், பழனி ரோடு, திண்டுக்கல் 624001 என்ற முகவரிக்கு வந்து சேரும் வகையில் அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 87620 13767 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT