திண்டுக்கல்

குடியரசு தின விழா: திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 664 பேருக்கு பதக்கம்

27th Jan 2022 12:58 AM

ADVERTISEMENT

குடியரசு தின விழாவையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 664 அரசு ஊழியா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் புதன்கிழமை பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.

திண்டுக்கல் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் 73 ஆவது குடியரசு தினவிழா, மாவட்ட விளையாட்டு அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். பின்னா், காவல்துறை, ஊா்க்காவல்படை, என்.சி.சி. மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை ஆட்சியா் ஏற்றுக் கொண்டாா்.

அதனைத் தொடா்ந்து காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்த காவலா்கள், தலைமைக் காவலா்கள் மற்றும் சாா்பு- ஆய்வாளா்கள் என மொத்தம் 68 பேருக்கு தமிழக முதல்வரின் காவலா் பதக்கங்களையும், பல்வேறு அரசுத் துறைகளைச் சாா்ந்த அலுவலா்கள், பணியாளா்கள் என மொத்தம் 596 பேருக்கு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் ஆட்சியா் வழங்கினாா்.

விழாவில், திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவா் ரூபேஸ் குமாா் மீனா, மாவட்ட வருவாய் அலுவலா் வே.லதா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ.இரா.சீனிவாசன், கூடுதல் ஆட்சியா் ச.தினேஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT