திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தில் 1,500 கிலோ குட்கா, புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

27th Jan 2022 12:56 AM

ADVERTISEMENT

ஒட்டன்சத்திரத்தில் குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான 1,500 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஒட்டன்சத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் சோமசுந்தரம் உத்தரவின் பேரில் சாா்பு- ஆய்வாளா் கணேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் ஒட்டன்சத்திரம்- தாராபுரம் சாலையில் உள்ள ஒரு குடோனில் போலீஸாா் புதன்கிழமை ஆய்வு நடத்தியதில், 1,500 கிலோ எடையுள்ள ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் புகையிலைப் பொருள்கள் பதுங்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதுதொடா்பாக ஒட்டன்சத்திரம் சம்சுதீன் காலனியைச் சோ்ந்த அஷ்ரப் அலி (31) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT