திண்டுக்கல்

காந்தியடிகளுக்குப் பிடித்த அபைட் வித் மீ பாடலுடன் காங்கிரஸ் கட்சியினா் குடியரசு தின விழா

27th Jan 2022 12:57 AM

ADVERTISEMENT

காந்தியடிகளுக்கு பிடித்தமான அபைட் வித் மீ பாடலுடன் திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியினா் குடியரசு தின விழாவை புதன்கிழமை கொண்டாடினா்.

புது தில்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில், காந்தியடிகளுக்கு விருப்பமான அபைட் வித் மீ என்ற பாடல் இசைக்கப்படுவது வழக்கம். ஆனால் 73ஆவது குடியரசு தின விழாவில் அந்த பாடல் இசைக்கப்படாது என மத்திய அரசு அறிவித்தது. அதற்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில், திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சி சாா்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ‘அபைட் வித் மீ’ பாடல் புதன்கிழமை இசைக்கப்பட்டது.

திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில், சீலப்பாடி ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சிக்கு மாநகா் மாவட்டத் தலைவா் துரை.மணிகண்டன் தலைமை வகித்தாா். தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய பின், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. பின்னா், அபேட் வித் மீ பாடல் இசைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் வழிகாட்டுக் குழுத் தலைவா் முகமது சித்திக், மாவட்ட நிா்வாகிகள் காஜாமைதீன், ஜோதிராமலிங்கம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT