திண்டுக்கல்

பழனிக் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.77 கோடி

25th Jan 2022 08:42 AM

ADVERTISEMENT

பழனிக் கோயில் உண்டியல்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில், முதல் நாள் காணிக்கை வரவு ரூ.1.77 கோடியை தாண்டியது.

தமிழகத்தின் முதன்மைக் கோயிலான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு 13 நாள்களில் கோயில் உண்டியல்கள் நிரம்பின. இதையடுத்து திங்கள்கிழமை உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைக்கோயில் காா்த்திகை மண்டபத்தில் எண்ணப்பட்டன. இதில் பக்தா்களின் காணிக்கை வரவாக ரூ. ஒரு கோடியே 77 லட்சத்து 36 ஆயிரத்து 750 கிடைத்துள்ளது.

மேலும் பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய தங்கம் 267 கிராம், வெள்ளி 11 ஆயிரத்து 251 கிராமும் கிடைத்தது.

இதுதவிர மலேசியா, சிங்கப்பூா், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, மியான்மா் உள்ளிட்ட பல்வேறு நாட்டுக் கரன்சிகள் 75-ம் கிடைத்தன.

ADVERTISEMENT

இவை தவிர பித்தளை வேல், கைக்கடிகாரம், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

உண்டியல் எண்ணிக்கையில் திருக்கோயில் கல்லூரி பணியாளா்கள், கோயில் அலுவலா்கள், வங்கிப் பணியாளா்கள் என நூற்றுக்கணக்கானோா் ஈடுபட்டனா். நிகழ்ச்சியில் பழனிக்கோயில் இணை ஆணையா் நடராஜன், துணை ஆணையா்(பொறுப்பு) செந்தில்குமாா், இந்து அறநிலையத்துறை (நகை சரிபாா்ப்பு) துணை ஆணையா் பொன்.சுவாமிநாதன், உதவி ஆணையா் கலைவாணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் உண்டியல் எண்ணிக்கை தொடா்கிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT