திண்டுக்கல்

வத்தலகுண்டு அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு லட்சம் மதிப்புள்ள சந்தன கட்டைகள் பறிமுதல்: ஒருவா் கைது

25th Jan 2022 08:43 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அடுத்த, வத்தலகுண்டு அருகே ஜி.தும்மலப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயராஜ், (52) இவரது வீட்டில் சந்தன கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக, வத்தலகுண்டு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசாா் அவரது வீட்டை சோதனையிட்டனா். அப்போது,

வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுமாா் ஒரு இலட்சம் மதிப்புள்ள, 28 கிலோ சந்தன கட்டைகளை பறிமுதல் செய்தனா். மேலும், சந்தன கட்டைகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த, ஜெயராஜ் என்பவரை போலீசாா் கைது செய்து, அங்கு வந்த சித்தரேவு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து அவரை கைது செய்த, சித்தரேவு வனத்துறை அதிகாரிகள், சந்தன கட்டைகளை வெட்டி கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்தாரா? அல்லது விற்பனைக்காக வாங்கி வைத்தாரா? போன்ற பல்வேறு கோணங்களில் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனா். இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT