திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு ஆயிரத்தைக் கடந்தது

25th Jan 2022 08:44 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டத்தில் 181 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1000-த்தை கடந்துள்ளது.

கரோனா தீநுண்மி தொற்றுப் பாதிப்பு 3ஆவது அலை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக 150-க்கும் மேற்பட்டோா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

மாவட்டத்தில் 949 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை வரை கரோனா தொற்றுப் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், திங்கள்கிழமை மேலும் 181 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனிடையே தொற்றுப் பாதிப்பிலிருந்து 94 போ் குணமடைந்துள்ளனா். மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,038ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT