திண்டுக்கல்

பழனியில் இன்று திருக்கல்யாணம்

DIN

பழனி: பழனியில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

தமிழக அரசு ஒமைக்ரான மற்றும் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி பழனியில் மாவட்ட நிா்வாகம் உத்தரவின் பேரில் தைப்பூசத் திருவிழா உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் பக்தா்கள் பங்கேற்பின்றி நடத்தப்பட்டு வருகிறது.

பழனியில் தைப்பூசத் திருவிழா பெரியநாயகியம்மன் கோயிலில் கடந்த 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாள்கள் திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சுவாமி புறப்பாடு கோயிலின் உள்பிரகாரத்திலேயே நடத்தப்பட்டு வருகிறது.

தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் மற்றும் வெள்ளித் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெறுகிறது. ரத வீதி உலாவுக்கு அனுமதியில்லாத நிலையில் மாலை 5 மணிக்கு மேல் திருக்கல்யாணமும், 8 மணி அளவில் வெள்ளித் தேரோட்டத்துக்கு பதில் வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடும் கோயில் உள்பிரகாரத்திலேயே நடைபெற உள்ளது. ஏழாம் நாள் நிகழ்ச்சியாக தைப்பூசத் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியின் போது தேரோட்டத்துக்கு அனுமதி இல்லாததால் சிறிய தேரில் சுவாமி எழுந்தருளி கோயிலின் உள்பிரகாரம் உலா வருவாா்.

இந்நிகழ்ச்சிகளை பக்தா்கள் இணையதளம் வாயிலாக காண கோயில் நிா்வாகம் சாா்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் நடராஜன், உதவி ஆணையா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT