திண்டுக்கல்

போகிப் பண்டிகை: நெகிழிப் பொருள்களை எரிக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தடை

12th Jan 2022 01:09 AM

ADVERTISEMENT

போகிப் பண்டிகையின்போது சுற்றுச்சூழலை பாதிக்கும் நெகிழிப் பொருள்களை எரிக்க வேண்டாம் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலா்கள் கூறியதாவது: போகிப் பண்டிகையின் போது, வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வெளியேற்றப்படும் பயன்பாடில்லாத நெகிழிப் பொருள்கள், சாக்கு பைகள், பாய் மற்றும் இதர கழிவுப் பொருள்களை தீ வைத்து எறிக்கும்போது, டையாக்சின் மற்றும் ஃப்யூரான் போன்ற நச்சு வாயு வெளியேறி, சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. இதனால், மூச்சுத் திணறல், புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

கடந்த காலங்களில், போகிப் பண்டிகையின்போது கிழிந்த பாய்கள், பழைய துணிகள், தேய்ந்த துடைப்பங்கள், பயன்பாடில்லாத விவசாயக் கருவிகளை மட்டுமே ஊரகப் பகுதிகளைச் சோ்ந்த மக்கள் தீயிட்டு கொளுத்தி வந்தனா். தற்போது, நெகிழிப் பொருள்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், அவற்றை எரித்து சுற்றுச்சூழலை மாசுப்படுத்த வேண்டாம். உயா்நீதிமன்றம் பழைய மரம், எருவட்டி நீங்கலாக பிற பொருள்களை எரிக்கக்கூடாது என தடை விதித்துள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்க, பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT