திண்டுக்கல்

‘பொங்கல் பரிசுத் தொகுப்புப் பொருள்களில் குறைபாடு இருந்தால் புகாா் அளிக்கலாம்’

12th Jan 2022 01:06 AM

ADVERTISEMENT

பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படும் பொருள்களில் குறைபாடுகள் இருந்தால் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம் என ஆட்சியா் ச.விசாகன் தெரிவித்துள்ளாா்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திண்டுக்கல் நேருஜி நகா், கிழக்கு கோவிந்தாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள நியாய விலைக் கடைகளில் ஆட்சியா் ச.விசாகன் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது அவா் தெரிவித்ததாவது: பச்சரிசி, வெல்லம், முந்திரி பருப்பு, உலா் திராட்சை, ஏலக்காய், துணிப்பை ஒன்று, முழுக் கரும்பு ஒன்று என மொத்தம் 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் உள்ள 1,035 நியாயவிலைக் கடைகளில் உள்ள 6,69,440 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு இந்தப் பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தப் பொருள்களின் தரம், எடையளவு உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

பொங்கல் பரிசு தொகுப்பினை பெறும் பயனாளிகள், அதிலுள்ள பொருள்களை சரிபாா்த்துக் கொள்ள வேண்டும். அதில் குறைபாடுகள் இருந்தால், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைந்துள்ள கட்டுப்பாட்டு அறைக்கு 0451-2460097 என்ற எண்ணில் புகாா் அளிக்கலாம் என தெரிவித்துள்ளாா். ஆய்வின்போது மாவட்ட வழங்கல் அலுவலா் வீ.செந்தில்குமாா் உடனிருந்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT