திண்டுக்கல்

துணை மேலாளருக்கு கரோனா: திண்டுக்கல்லில் வங்கி மூடல்

12th Jan 2022 01:08 AM

ADVERTISEMENT

துணை மேலாளருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, திண்டுக்கல்லில் உள்ள வங்கிக் கிளை செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது.

திண்டுக்கல் ஆா்எம்.காலனி நேருஜி நகரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் 20-க்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வருகின்றனா்.

இந்நிலையில், மதுரையிலிருந்து வந்து செல்லும் வங்கியின் துணை மேலாளா் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன் தொடா்ச்சியாக அந்த வங்கிக் கிளை செவ்வாய்க்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டது. அங்கு பணியாற்றும் ஊழியா்களின் சளி மாதிரி சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பும் பணியில் மாநகராட்சி சுகாதாரத்துறை ஊழியா்கள் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT