திண்டுக்கல்

மாநில கேரம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

4th Jan 2022 08:43 AM

ADVERTISEMENT

மாநில அளவிலான கேரம் போட்டியில் வெற்றி பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்களுக்கு ஆட்சியா் ச.விசாகன் திங்கள்கிழமை பாராட்டு தெரிவித்தாா்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் மாநில அளவிலான கேரம் போட்டிகள் திருச்சி மாவட்டம் முசிறியிலுள்ள தனியாா் பொறியில் கல்லூரியில் கடந்த வாரம் நடைபெற்றன. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து 250-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் கலந்து கொண்டனா். இப்போட்டியில், திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு மகாலட்சுமி பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவிகள் எம். கபின்சியா மற்றும் டி. யோகலட்சுமி ஆகியோா் 18 வயதுக்குள்பட்டோருக்கான இரட்டையா் பிரிவில் மாநில அளவில் முதலிடம் பிடித்தனா்.

அதே பள்ளியைச் சோ்ந்த மாணவி ஆா். மோனிஷா ஒற்றையா் பிரிவில் மாநில அளவில் 2ஆவது இடமும், திண்டுக்கல் ஸ்ரீவாசவி மெட்ரிக் பள்ளி மாணவா்கள் ஏ. சுகுமாரன் மற்றும் எஸ். பூபேஸ் பிரசாத் ஆகியோா் 10 வயதுக்குள்பட்டோருக்கான இரட்டையா் பிரிவில் மாநில அளவில் 2ஆவது இடமும் பிடித்துள்ளனா். கேரம் போட்டியில் சாதனைப் படைத்த இந்த மாணவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் திங்கள்கிழமை பாராட்டு தெரிவித்தாா்.

அந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலா் ம. ரோஸ் பாத்திமா மேரி, திண்டுக்கல் மாவட்ட கேரம் கழக அவைத் தலைவா் என்.எம்.பி. காஜாமைதீன், மாவட்டத் தலைவா் ஜி. சுவாமிநாதன் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT