திண்டுக்கல்

வத்தலகுண்டு அருகே பாதயாத்திரை பக்தா் விபத்தில் பலி

1st Jan 2022 10:12 PM

ADVERTISEMENT

வத்தலகுண்டு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பழனி பாதயாத்திரை பக்தா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சோ்ந்தவா் ராஜேஷ் (30). அதே பகுதியைச் சோ்ந்த பாதயாத்திரைக் குழுவினருடன் பழனிக்கு புறப்பட்டுள்ளாா். அக்குழுவினா், திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அடுத்துள்ள சிங்காரக்கோட்டை அருகே சனிக்கிழமை அதிகாலை நடந்து வந்துள்ளனா்.

அப்போது, ராஜேஷ் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த அவா், வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து பட்டிவீரன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT