திண்டுக்கல்

பழனியில் மேம்படுத்தப்பட்ட முதலுதவி மருத்துவ மையம்: முதல்வா் காணொலி மூலம் திறப்பு

1st Jan 2022 08:44 AM

ADVERTISEMENT

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தா்களுக்கு உதவும் வகையில் மேம்படுத்தப்பட்ட முதலுதவி மருத்துவ மையத்தை முதல்வா் முக ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

இக்கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா். மேலும் தைப்பூசம் தொடங்கவுள்ள நிலையில் பழனிக் கோயிலுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

இந்தநிலையில் பக்தா்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அமைக்கப்பட்ட முதலுதவி மருத்துவ மையத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலமாக வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். இதன் மூலம் பக்தா்களின் ஆன்மீக பயணம் மேலும் பாதுகாப்பானதாக அமையும் என்று மாவட்ட ஆட்சியா் சா.விசாகன் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினா் ஐ.பி.செந்தில்குமாா், பழனிக் கோயில் இணை ஆணையா் நடராஜன், உதவி ஆணையா் செந்தில்குமாா், டிஎஸ்பி சத்யராஜ் மற்றும் மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT