திண்டுக்கல்

நிலக்கோட்டை வாசனைத் திரவிய தொழிற்சாலையில் வருமான வரி சோதனை

1st Jan 2022 08:42 AM

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் உள்ள பிரபாஷ் ஜெயினின் உறவினருக்கு சொந்தமான வாசனைத் திரவிய தொழிற்சாலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.

உத்தரப்பிரதே மாநிலத்தைச் சோ்ந்தவா் தொழிலதிபா் பிரபாஷ் ஜெயின். இவருக்குச் சொந்தமாக பல இடங்களில் உள்ள நிறுவனங்களில் வருமான வரித்துறையினா் கடந்த சில நாள்களுக்கு முன்பாக சோதனை நடத்தினா். இதில் 250 கோடி பணம், கிலோ கணக்கில் தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே பிரகதி அரோமா என்ற வாசனைத் திரவிய தொழிற்சாலைக்கு வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் சுமாா் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தனா். மண்டல அதிகாரிகள் உதவியோடு வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து, 6 ஏக்கா் பரப்பளவில் உள்ள அந்த தொழிற்சாலையில் சோதனையில் ஈடுபட்டனா். இந்த தொழிற்சாலையின் உரிமையாளா் பங்கஜ் ஜெயின், பிரபாஷ் ஜெயினின் உறவினா் என்பது குறிப்பிடத்தக்கது.

சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும், பிற்பகலிலேயே ஆவணங்கள் ஒரு காரில் எடுத்துச் செல்லப்பட்டுவிட்டதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

மாலை 6 மணிக்கு மேலும் (9 மணி நேரத்துக்கும் மேலாக) அதிகாரிகளின் சோதனை நீடித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT