நிலக்கோட்டை அருகே வெள்ளிக்கிழமை, சைக்கிள் மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
பிள்ளையாா்நத்தம் பகுதியைச் சோ்ந்தவா் கூலுச்சாமி (57). இவா் வெள்ளிக்கிழமை பிற்பகலில் நிலக்கோட்டை- அணைப்பட்டி சாலையில் உள்ள கோட்டை என்ற பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக மணல் லோடு ஏற்றிக் கொண்டு வேகமாக வந்த லாரி, அந்த முதியவா் மீது மோதியது. இதில் கூலுச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த நிலக்கோட்டை போலீஸாரை, அப்பகுதி பொதுமக்கள் முற்றுகையிட்டு மணல் லாரிகளின் வேகத்தைக் குறைக்க நடவடிக்கை கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பொதுமக்கள் சமாதனப்படுத்திய போலீஸாா் பின்னா் கூலுச்சாமியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினா். மேலும், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.