திண்டுக்கல்

அரசு ஊழியா்கள் மருத்துவக் காப்பீட்டில் பயன்பெற நலப் பணிகள் இணை இயக்குநரிடம் விண்ணப்பிக்கலாம்

1st Jan 2022 08:43 AM

ADVERTISEMENT

அரசு ஊழியா்கள் புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ், மருத்துவ செலவுத் தொகை பெற மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநருக்கு விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: அரசு ஊழியா்கள் புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ், மருத்துவ செலவுத் தொகையினை பெற மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநருக்கு விண்ணப்பிக்க வேண்டுமென அரசாணை எண் 160-இல் (நிதி-ஊதியங்கள்) தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 01.01.2022 முதல் மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டு, அதற்கான மருத்துவ செலவுத் தொகையினை திரும்ப பெறுவதற்கான விண்ணப்பங்களை அரசு ஊழியா்கள் தாங்கள் பணியாற்றும் அலுவலகம் மூலமாக, திண்டுக்கல் மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநருக்கு உரிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT