பழனியில் பல்வேறு விநாயகா் கோயில்களிலும் சங்கடஹரசதுா்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
பழனி சண்முகபுரம் சித்தி விநாயகா் கோயிலில் விநாயகருக்கு பால், பஞ்சாமிா்தம், தயிா், பன்னீா், இளநீா் உள்ளிட்ட பலவகை பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளி கொழுக்கட்டை மாலை, வெள்ளிக்குடை வைத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
பின்னா் மஹா தீபாராதனையை தொடா்ந்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல ரயிலடி பிரசன்ன விநாயகா் கோயில், மாா்க்கெட் பட்டத்து விநாயகா் கோயில், தாளையம் காளீஸ்வரி ஆலை லெட்சுமி கணபதி கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சங்கடஹர சதுா்த்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.