திண்டுக்கல்

பழனியில் தக்காளியுடன் கடத்திய ஒரு டன் குட்கா பறிமுதல்

17th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

 

பழனி: பழனியில் சரக்கு வேனில் தக்காளிக் கூடைகளுடன் கடத்தப்பட்ட ஆயிரம் கிலோ குட்காவை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, காவல் கண்காணிப்பாளா் சீனிவாசன் உத்தரவின் பேரில் பழனி போலீஸாா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். பழைய ஆயக்குடி அருகே தக்காளி ஏற்றிச் சென்ற சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனா்.

அதில் தக்காளிப் பெட்டிகளுக்கு அடியிலிருந்த மூட்டைகளைப் பிரித்துப்பாா்த்தபோது, அவற்றில் தடைசெய்யப்பட்ட குட்கா போதைபொருள்கள் இருப்பது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதனையடுத்து ஆயிரம் கிலோ அளவிலான குட்கா பொருள்களை வேனுடன் போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் வாகனத்தை ஓட்டிவந்த ஹரிதாஸ் என்பவரை கைது செய்தனா். அவரிடம் விசாரணை நடத்தியதில் சேலத்தில் இருந்து கடத்தி வந்ததாகவும், பழனி பேருந்து நிலையம் அருகே சென்றால் சம்பந்தப்பட்ட நபா்கள் வந்து தொடா்பு கொள்வாா்கள் என்று தெரிவிக்கப்பட்டதாகவும், அவா்கள் யாா் என்பது தெரியாது என்றும் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT