திண்டுக்கல்

திண்டுக்கல் மாநகராட்சி அதிமுக வேட்பாளா்திமுகவில் இணைந்தாா்

17th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

 

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சித் தோ்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் புதன்கிழமை திமுகவில் இணைந்தாா்.

திண்டுக்கல் மாநகராட்சியில் மொத்தம் 48 வாா்டுகள் உள்ளன. இதில் 1 ஆவது வாா்டில் அதிமுக சாா்பில் பா.முத்துப்பாண்டி என்பவா் போட்டியிடுகிறாா். திமுக சாா்பில் மா.கிருபாகரன், பாஜக சாா்பில் செல்லப்பாண்டி உள்ளிட்டோரும் போட்டியிடுகின்றனா். வாக்குப்பதிவு பிப்.19 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுக வேட்பாளரான முத்துப்பாண்டி, திமுக துணை பொதுச் செயலரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான இ.பெரியசாமியை புதன்கிழமை சந்தித்து திமுகவில் இணைந்தாா். அவருடன் 1 ஆவது வாா்டு அதிமுக நிா்வாகிகள் சிலரும் திமுகவில் இணைந்துள்ளனா். இந்த தகவல் அதிமுக வட்டாரத்தில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT