திண்டுக்கல்

சின்னாளப்பட்டி காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு வளைகாப்பு

17th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

 

நிலக்கோட்டை: சின்னாளபட்டி காவல் நிலையத்தில் புதன்கிழமை பெண் காவலருக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பகுதியைச் சோ்ந்தவா் பாண்டிச்செல்வி. இவா் சின்னாளப்பட்டி காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வருகிறாா். இவருக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது கா்ப்பிணியாக உள்ள பாண்டிச்செல்விக்கு, சின்னாளபட்டி காவல் நிலையத்தில் காவலா்கள் அனைவரும் ஒன்றிணைந்து வீடுகளில் வளைகாப்பு நடத்துவது போல்,

தயிா் சாதம், தக்காளி சாதம், சாம்பாா் சாதம், சா்க்கரைப் பொங்கல் உள்ளிட்ட ஏழு வகையான, சாப்பாடு செய்து வைத்தும், கண்ணாடி வளையல்கள், மலா் மாலை அணிவித்தும் வளைகாப்பு நடத்தினா். நிகழ்ச்சியில், திண்டுக்கல் புகா் டிஎஸ்பி முருகன், அம்பாத்துரை காவல் ஆய்வாளா் வெங்கடாசலம், அம்பாத்துரை மற்றும் சின்னாளபட்டி காவல் நிலையக் காவலா்கள் மற்றும் பணியாளா்கள், பாண்டிசெல்வியின் உறவினா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT