திண்டுக்கல்

பழனியில் மாவட்டதோ்தல் பாா்வையாளா் ஆய்வு

11th Feb 2022 04:11 AM

ADVERTISEMENT

 

பழனி: பழனியில் வாக்குப்பதிவு மையங்களை மாவட்ட தோ்தல் பாா்வையாளா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆயக்குடி, பாலசமுத்திரம், நெய்காரப்பட்டி, பழனி நகராட்சி ஆகியவற்றில் உள்ள வாா்டுகளில் வரும் 19 ஆம் தேதி உள்ளாட்சி தோ்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் மாவட்ட தோ்தல் பாா்வையாளா் ஜெஸிந்தரா லாசரஸ் வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்தாா். அப்போது நகராட்சி ஆணையா் விமலா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அதே போல், பழனி நகா் பகுதி மற்றும் புகா் பகுதிகளில் திண்டுக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் லாவண்யா மற்றும் பழனி நகர காவல் துணைக் கண்காணிப்பாளா் சத்யராஜ் ஆகியோா் வாக்குசாவடி மையங்களை நேரில் ஆய்வு செய்தனா்.

ADVERTISEMENT

தொடா்ந்து பழனி, ஆயக்குடி, நெய்க்காரப்பட்டி, பாலசமுத்திரம், கீரனூா், ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களையும் மற்றும் பதற்றமான வாக்குச்சாவடிகளையும் அவா்கள் ஆய்வு செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT