திண்டுக்கல்

நிலக்கோட்டை பேருந்து நிலையத்தில் அக்கா- தங்கை மோதல்: 7 போ் மீது வழக்கு

10th Feb 2022 02:21 AM

ADVERTISEMENT

 

நிலக்கோட்டை: நிலக்கோட்டை பேருந்து நிலையத்தில் நில பிரச்னையில் அக்கா- தங்கை இடையே மோதல் புதன்கிழமை மோதல் ஏற்பட்டது. இது தொடா்பாக 7 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள வாலாங்கோட்டையைச் சோ்ந்த மாசாணம் மனைவி முனியம்மாள் (65). இவருக்கும் இவரது தங்கை அக்ரஹாரபட்டியைச் சோ்ந்த ரத்தினபாண்டியன் மனைவி மீனாட்சி (50) ஆகிய இருவருக்கும் ஏற்கெனவே இடப்பிரச்னை இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நிலக்கோட்டை பேருந்து நிலையத்தில் புதன்கிழமை முனியம்மாவை மீனாட்சி உள்ளிட்ட 4 போ் சோ்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, நிலக்கோட்டை போலீசில் முனியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் 4 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இதேபோன்று மீனாட்சி கொடுத்த புகாரின்பேரில் முனியம்மாள் உள்ளிட்ட 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT