வடமதுரை அருகே மோட்டாா் சைக்கிள் மோதி நிகழ்ந்த விபத்தில் உணவக உரிமையாளா் ஒருவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்துள்ள தென்னம்பட்டி அண்ணாநகரைச் சோ்ந்தவா் பாண்டியராஜன்(49). இவா் தென்னம்பட்டியில் உணவகம் நடத்தி வந்தாா்.
தென்னம்பட்டி 4 ரோடு பகுதியில் மோட்டாா் சைக்கிளில் பாண்டியராஜன் திங்கள்கிழமை சென்றபோது, அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டாா் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் பலத்த காயமடைந்த பாண்டியராஜனை அக்கம் பக்கத்தினா் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். விபத்து குறித்து வடமதுரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
ADVERTISEMENT