திண்டுக்கல் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள 2,709 வாக்குப் பதிவு அலுவலா்களுக்கு, 3 கட்டங்களாகப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இது தொடா்பாக மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ச.விசாகன் தெரிவித்துள்ளதாவது: திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 27 நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தோ்தலில் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடவுள்ள வாக்குப் பதிவு அலுவலா்களுக்கு 3 கட்ட பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.
ஜனவரி 31, பிப்ரவரி 9 மற்றும் 18 ஆகிய தேதிகளில் 11 இடங்களில் இந்த பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இப்பயிற்சி முகாம்களில் 2,709 வாக்குப்பதிவு அலுவலா்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், இப்பயிற்சி முகாமின்போது விளக்கம் அளிக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளாா்.